Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கிளந்தானில் களியாட்டம் ஆடுவதா? நடவடிக்கை எடுக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளந்தானில் களியாட்டம் ஆடுவதா? நடவடிக்கை எடுக்கப்படும்

தானா மேரா, டிச. 23-

கிளந்தான், தானா மேராவில் சுரங்க நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் இளம் பெண் ஒருவரின் ஆபாசக் களியாட்ட நிகழ்வு இடம் பெற்றது தொடர்பில் ஏற்பாட்டாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆண்களின் கண்களை உறுத்தும் வகையில் காபரே நடனம் என்ற போர்வையில் அந்தப் பெண், சற்று தூக்கலாக குலுக்கல் நடனத்தை படைத்தது, மாநில கலாச்சார அம்சங்களுக்கு பொருந்தாததாகும் என்று கிளந்தான் மாநில ஊராட்சி மன்றம், வீடமைப்பு, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹில்மி அப்துல்லா தெரித்துள்ளார்.

தானா மேராவில் உள்ள பள்ளி ஒன்றின் நிதி திரட்டும் நிகழ்விற்காக பள்ளி மண்டத்தில் நடைபெற்ற இது போன்ற களியாட்ட நிகழ்வுகளை அறவே அனுமதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுரங்க முதலாளிகளும், சுரங்க தொழிலாளர்களும், அழைக்கப்பட்ட பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு ஊராட்சி மன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை ஹில்மி அப்துல்லா தெரித்துள்ளார்.

இப்படியொரு நடனம் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டும், உரிய நடவடிக்கைக்கு எதிர்கொள்ளும் வகையிலும் அந்த சுரங்க நிறுவனத்திற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்