சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சுங்கை பெசார் காவல் நிலையத்தில் மாற்றுத் திறனாளியான தடுப்புக்கைதி ஒருவர் மரணம் அடைந்தார். அவரின் உடலில் எந்தவொரு காயமும் இல்லாததால் அவரின் மரணத்தில் குற்றத்தன்மை எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறி இலாகாவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.
1952 ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 49 வயதுடைய அந்த மாற்றுத் திறனாளி, தாம் தடுத்து வைக்கப்பட்டு இருந்த காவல் அறையில் சுயநினவு இழந்த நிலையில் கிடந்தது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்த விசாரணை கைதி மரணம் அடைந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.








