Sep 22, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச சேட்டை புரிந்ததாக கூறப்படும் தேசிய பயிற்றுனர் பதவி விலகல்
தற்போதைய செய்திகள்

ஆபாச சேட்டை புரிந்ததாக கூறப்படும் தேசிய பயிற்றுனர் பதவி விலகல்

Share:

தேசிய சைக்கிளோட்ட வீராங்கனைக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து, ஆபாச சேட்டை புரிந்ததாக கூறப்படும் தேசிய பயிற்றுனர் ஒருவர் பதவி விலகியதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

அந்தத் தேசிய பயிற்றுனருக்கு எதிராக, சம்பந்தப்பட்ட வீராங்கனை போலீசில் புகார் செய்தது தொடர்ந்து அந்தப் பயிற்றுனரை தேசிய சைக்கிளோட்ட சம்மேளனம் இடை நிக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் அந்த நபர், தாமே முன் வந்து தமது பதவியை ராஜினமா செய்துள்ளதாக ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அமைச்சு அளவிலும், விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஹன்னா இயோ விவரித்தார்.

Related News