Jul 18, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

Share:

பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் எல்ஆர்டி 3 இரயில் சேவை, அடுத்த இரு வாரங்களில், அதாவது இம்மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாகத் தனது செயல்பாட்டைத் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

சாலைப் பாதுகாப்புப் பேரவையின் வருடாந்தரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அந்தோணி லோக், , "எல்ஆர்டி 3 திட்டம் தற்போது இறுதி கட்டச் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இரயில்கள் தடையின்றி இயங்குவதற்குத் தயாராக உள்ளதால், ஜூன் இறுதிக்குள் இச்சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்" என்றார்.

பண்டார் உத்தாமா முதல் கிள்ளான் ஜோஹான் செத்தியா வரையிலான 37.8 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இத்திட்டம், மலேசியாவின் மிகப்பெரிய இலகுரக இரயில் மேம்பாட்டுத் திட்டமாகும். முன்னதாக, இறுதி கட்ட ஒருங்கிணைப்புப் பணிகளில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இத்திட்டம் திட்டமிட்ட இலக்கை விடத் தள்ளிப்போனதுடன், ஒப்பந்த நிறுவனத்திற்குப் பல மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News