Jul 18, 2026
Thisaigal NewsYouTube
மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு
தற்போதைய செய்திகள்

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

Share:

இஸ்லாத்திலிருந்து வெளியேறி 33 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்ட 58 வயதுப் பெண் ஒருவர், தனது மத நிலையை உறுதிப்படுத்த ஷரியா நீதிமன்றத்தின் கடிதத்தைக் கோரும் தேசியப் பதிவுத் துறையான ஜே.பி.என் உத்தரவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான இப்பெண்மணி, 1993-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாகத் தனது மதத்தை மாற்றிக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 1995-இல் அவருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2025 டிசம்பரில் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த போது, ஜே.பி.என் தரப்பில் ஷரியா நீதிமன்றத்தின் உறுதிப்படுத்தல் கடிதம் கோரப்பட்டது.

தேசியப் பதிவுத் துறையின் இந்த நிபந்தனை சட்டவிரோதமானது மற்றும் நடைமுறைக்கு மாறானது என்று வாதிட்டுள்ள அவர், தமக்கு நிபந்தனையின்றி புதிய அடையாள அட்டையை வழங்க JPN-க்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Related News