Jul 18, 2026
Thisaigal NewsYouTube
கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

Share:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பிணியான தனது காதலியைத் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்த முன்னாள் கல்லூரி மாணவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசுத் தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த மே 14-ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றம் 23 வயது முகமது ஃபக்ருல் ஐமான்க்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து, அதற்குப் பதிலாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு கடந்த மே 25 அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் குற்றவாளியின் வழக்கறிஞர் முஹம்மது நூர் தம்ரின் இன்று தெரிவித்தார்.

கடந்த 2023 மே மாதம், சபா பெர்னம், சுங்கை லிமாவ் பகுதியில் 21 வயது நூர் அனிசாவைத் கொலை செய்த குற்றத்திற்காக, கடந்தாண்டு அக்டோபரில் கிள்ளான் உயர் நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News