சிலாங்கூர், காஜாங், ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் செத்தியா ஆலாம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்து, 41 வெளிநாட்டினரை போலீஸ் துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், கைதானவர்களில் 30 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர் அவர்களிடமிருந்து 4 லட்சத்து 9 ஆயிரத்து 200 ரிங்கிட் ரொக்கப்பணம் மற்றும் மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நான்கு கும்பல்களும் தனித்தனியாக இயங்கி, போலி வேலை வாய்ப்புகள், இல்லாத முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் காதல் மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளன. இக்கும்பல்கள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இயங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ ஷாசெலி கஹார் விளக்கினார்.








