கோலாலம்பூர், அக்டோபர்.22-
நேற்று கோலாலம்பூரில் இருந்து சரவாக் பிந்துலு நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH2742 திடீரெனக் காற்றழுத்தப் பிரச்சினையைச் சந்தித்துள்ளது.
இதனால் அவ்விமானத்தில் பயணித்த பயணிகள் அவசரமாக ஆக்சிஜன் மாஸ்குகளை அணியும் நிலைக்கு உள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து, காலை 10.31 மணியளவில் அவ்விமானம் பிந்துலு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதே வேளையில், பயணிகளின் பாதுகாப்பிற்கே தாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாகவும், இச்சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அறிவித்துள்ளது.