Dec 2, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் பேருந்து ஓட்டுநர் கரத்தை இழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் பேருந்து ஓட்டுநர் கரத்தை இழந்தார்

Share:

விரைவு பேருந்து ஒன்று, லோரியின் பின்னால் மோதியதில் இரு பயணிகள் காயங்களுடன் உயிர்த்தப்பிய வேளையில் பேருந்து ஓட்டுநர் தனது வலது கரத்தை இழந்தார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் கிளந்தான், பாசீர் பூத்தே, ஜாலான் கோத்தா பாரு - கோலா திரெங்கானு சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

கோத்தா பாருவிலிருந்து கோலா திரெங்கானுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலை சமிக்ஞை விளக்கு பகுதியில் நின்றுக்கொண்டிருந்த லோரியின் பின்னால் மோதியதாக பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் ஜைஜூல் ரிசல் ஜகாரியா தெரிவித்தார்.

இந்த விபத்தில் 26 வயதுடைய பேருந்து ஓட்டுநரான முஹம்மாட் அமிருடின் அஸார் கடுங் காயங்களுடன் தமது வலது கரத்தை இழந்ததோடு, அப்பேருந்தில் பயணித்த இரு நபர்கள் சொற்பக் காயங்களுடன் உயிர்த் தப்பியதாக ஜைஜூல் ரிசல் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்