செர்டாங், அக்டோபர்.31-
கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கான், புளு வாட்டர் எஸ்டேட் சாலை வட்டத்திற்கு அருகில் ஒரு புதரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலையுண்டு கிடந்ததாக நம்பப்படும் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் உட்பட மூர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு உதவும் வகையில் 25 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
இதுவரையில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்தச் சம்பவம் தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








