குவாந்தான், டிசம்பர்.20-
பகாங் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வலுத்து வருவதால், குறிப்பாக ஆற்றோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவிப்புகளை மக்கள் அவ்வப்போது கவனித்து வரும் அதே வேளையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேவைப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதிச் செய்யுமாறு மாநில அரசாங்கத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.








