May 3, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

Share:

மலாக்கா, மார்ச்.14-

மலாக்காவில் மாநில அளவிலான ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி வழக்கம் போல இவ்வாண்டும் ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் Datuk Seri Ab Rauf Yusoh அறிவித்துள்ளார்.

மக்களின் ஆதரவைப் பாராட்டும் விதமாக, மலாக்கா மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஆதரவு இல்லாமல் தன்னால் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க இயலாது என்றும், உள்ளூர் மக்களுக்கு இந்த விருந்து உபசரிப்பை வழங்க மாநில அரசு விரும்புவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

வரும் மார்ச் 28-ஆம் தேதி, நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த திறந்த இல்ல உபசரிப்பில், பண்டிகைக் கால உணவுகளும், சுவையான சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேற்காசிய போர் காரணமாக, செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவ்வாண்டு திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News