ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்ட 25 ஆண்டுகளில் ரிங்கிட்டின் மதிப்பு அகக்குறைவான நிலைக்கு வீழ்ச்சி கண்டுள்ளது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு ரிங்கிட்டின் மதிப்பு மிக மோசமான சரிவை எதிர்நோக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.இது ரிங்கிட்டின் மதிப்பை மிக மோசமான அளவில் பலவீனமடைய செய்துள்ளது. ஓர் அமெரிக்க டாலருக்கு 4 வெள்ளி 80 காசு என விலை நிர்ணியிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் மிக மோசமான சரிவை ரிங்கிட் எதிர்நோக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் Yen நாணயத்திற்கு அடுத்து ஆசியாவின் படுமோசமான செயலாக்கத்தை கொண்ட நாணயமாக மலேசிய ரிங்கிட் வர்ணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிகையில் 2 வெள்ளி 40 காசாக இருந்த ரிங்கிட்டின் மதிப்பு வருகின்ற காலங்களில் ஒரு டாலருக்கு 5 வெள்ளிக்கு எகிறும் சாத்தியம் இருப்பதாக ஆருடம் கூறப்பட்டுள்ளது.








