கோலாலம்பூர், அக்டோபர்.28-
கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் ஓர் ஆடம்பர வீடமைப்புப் பகுதியின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து போலீசார் ஐந்து லடசம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாக மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
உள்ளூரைச் சேர்ந்த 47 நபரும், 56 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டது மூலம் 18.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை அந்த வீடமைப்புப் பகுதியின் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்ட ஒரு வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, பெரியளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.








