Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வேலைக்கு மட்டம் போடுவது பிரபலமாகி வருகிறது
தற்போதைய செய்திகள்

வேலைக்கு மட்டம் போடுவது பிரபலமாகி வருகிறது

Share:

பொதுச்சேவை ஊழியர்கள் மத்தியில் வேலைக்கு மட்டம் போடுவது மற்றும் கடமையாற்ற வேலைக்கு வராதது போன்ற குற்றங்கள் தற்போது பிலபலமாகி வருகிறது என்று எஸ்.பி.ஏ எனப்படும் அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் பொதுச்சேவை ஆணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ ரஹிம் சேமான் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் மத்தியில் காணப்படும் இத்தகைய சோம்பேறித்தனமான போக்கு நாட்டின் அரசாங்க கேந்திரத்திற்கு தலைமையேற்றுள்ள பொதுச் சேவைத்துறை தோற்றத்தை வெகுவாக பாதிக்கச் செய்து விடும் என்று ரஹிம் சேமான் நினைவுறுத்தினார்.

வாரத்திற்கு 7 நாட்கள்கூட வேலைக்கு வராதவர்களும் இருக்கின்றனர். அது மட்டுமின்றி நாள் கணக்கில் வேலைக்கு மட்டம் போடுகின்றவர்களும் உள்ளனர். இன்னும் சிலர் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் சொந்தமாகவே விடுப்பில் சென்று விடுகின்றனர் என்று பொதுச் சேவை ஆணையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் காணப்படும் பலவீனத்தை ரஹிம் சேமான் அம்பலப்படுத்தினார்.

Related News