பள்ளிகளின் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் ஆறு அடிப்படை பாடங்களைக் கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக இன்று மக்களவையில் தெரிவித்துள்ளது.
மலாய் மொழி, ஆங்கிலம், இஸ்லாமியக் கல்வி, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி, கலைக்கல்வி மற்றும் வரலாறு ஆகிய ஆறு முக்கிய பாடங்களுக்குக் கூடுதல் ஆசிரியர் தேவைப்படுகின்றனர் என்று துணைக் கல்வியமைச்சர், லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
ஆறு முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாகுறை நிலவி வருவதை தாம் நன்கு அறிவதாகவும், இப்பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்குக் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து 2023 -ஆம் ஆண்டு வரை ஓன் - ஓஃப் முறையின் கீழ் 22, 374 ஆசிரியர்கள் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளதகாவும் துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் விளக்கினார்.
தவிர, பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான காலியிடங்கள் இருப்பதை முதலில் உறுதி செய்த பின்னரே, நடப்புத் தேவைக்கு ஏற்ப அவ்விடங்கள் நிரப்பப்படும் என்பதையும் துணை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
ஒரு சில பட்டதாரிகள் நேர்முகப் பேட்டியில் தேர்வு பெறாததற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை ஏற்படும் பாடங்களுக்கான விருப்புரிமையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதையும் லிம் ஹுய் யிங் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில் வரும் ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையில் புதிய ஆசிரியர்களைப் பணிக்குச் சேர்க்கும் திட்டத்தைக் கல்வி அமைச்சு கொண்டு இருப்பதையும் லிம் ஹுய் யிங் கோடிகாட்டினார்.

Related News

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்


