Sep 25, 2026
Thisaigal NewsYouTube
தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: ஜூன் 11-இல் நடக்கிறது
தற்போதைய செய்திகள்

தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: ஜூன் 11-இல் நடக்கிறது

Share:

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, வரும் ஜூன் 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.45 மணி முதல் 10.00 மணிக்குள் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ்வாலயத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், அனுஷ்லிங்கம் மற்றும் நவ சக்தி ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு இப்புனித நன்னாளில் குடமுழுக்கு செய்யப்படவுள்ளது.

தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கயிலாய பரம்பரை, கந்தப்பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் மேலான ஆலோசனைகளின்படி இந்த மகா கும்பாபிஷேகம் பக்திப் பெருக்குடன் நடைபெறவிருக்கிறது.

இந்த கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலையில் விநாயகர் விசேஷ பூஜை, திருமுறை விண்ணப்பம் மற்றும் மகா தீபாராதனை பக்திப் பெருக்குடன் நடைபெற்றன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, அண்ணாமலையானின் திருவருளையும் பரிவார மூர்த்திகளின் பேரருளையும் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்போடு அழைக்கின்றனர்.

Related News