பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதாக கூறி ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி திரட்டிய சில நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட 41 வங்கி கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது. பொது மக்கள் வழங்கிய நிதியை அந்த நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்பைடயில் அவற்றின் வங்கி கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளன.
இந்த முறைகேடு தொடர்பாக சில நபர்களை எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அழைத்து, வாக்கு முலம் பதிவு செய்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதாக கூறி திரட்டப்பட்ட மொத்த நிதியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 7 கோடி வெள்ளியை தங்கள் சொந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.








