Mar 30, 2026
Thisaigal NewsYouTube
விமானக் கட்டணத்தை உயர்த்துகிறது  ஏர்ஏசியா
தற்போதைய செய்திகள்

விமானக் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்ஏசியா

Share:

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, நாட்டின் முன்னணி சிக்கன கட்டண விமான நிறுவமான ஏர்ஏசியா, விமானக் கட்டணங்களை சற்று உயர்த்த வாய்ப்புள்ளதாக கேப்பிட்டல் (Capital A) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.

இருப்பினும், தனது போட்டி நிறுவனங்களை விடக் குறைவான கட்டணத்தையே ஏர்ஏசியா வசூலிக்கும் என்றும், தனது 'மலிவு விலை' அடையாளத்தை நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் விலை அதிகரித்தாலும், விமானங்களுக்கான தேவை வலுவாக இருப்பதால் விமானங்கள் ரத்து செய்யப்படாது என அவர் உறுதி அளித்தார்

இந்தச் சுமையைத் தணிக்க விமான நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத்துறையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வளைகுடா நாடுகளின் விமானச் சேவை திறன் குறைந்துள்ள நிலையில், ஆசிய நாடுகளை மாற்று விமானப் போக்குவரத்து மையங்களாக மாற்ற இது ஒரு நல்வாய்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News