145 ஆண்டுகால வரலாற்றைத் சுமந்து நிற்கும் தைப்பிங் மணிக்கூண்டு , இப்போது ஒரு நவீன சுற்றுலாத் தகவல் மையமாகப் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
1881-இல் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னம், முன்பு போலீஸ் நிலையமாகவும், தீயணைப்பு நிலையமாகவும் செயல்பட்டது. தற்போது சுமார் 4 லட்சம் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் திரைகள் மற்றும் 3டி தொழில்நுட்பத்துடன் தைப்பிங்கின் வரலாற்றைச் சொல்லும் மையமாக மாறியுள்ளது.
இதனைத் திறந்து வைத்துப் பேசிய பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்லோ சீ யீ கூறுகையில் , '2024-இல் மட்டும் தைப்பிங்கிற்கு 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்த புதிய மையம் தைப்பிங்கின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும்' என்றார்.
இங்கு வரும் பயணிகள் தைப்பிங்கின் அமைதிப் பாதைகளான (Peace Trails) ஜானா வழித்தடம், டின் வழித்தடம் மற்றும் மாத்தாங் வழித்தடங்களைப் பற்றிய தகவல்களையும் பெறலாம். பழமையையும் நவீனத்தையும் இணைக்கும் இந்த முயற்சி, 'Visit Malaysia 2026' சுற்றுலா ஆண்டிற்கு ஒரு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது."








