Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை
தற்போதைய செய்திகள்

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

Share:

கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஈப்போவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து 13 வயது மாணவன் விழுந்த சம்பவத்தில் எவ்வித குற்றத்தன்மையும் இல்லை என்று பேரா மாநிலப் போலீஸ் தலைவர் அல்வி ஜைனல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.

போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இச்சம்பவம் அம்மாணவனின் சொந்த கவனக்குறைவினால் மட்டுமே ஏற்பட்டு அவனுக்குப் பலத்த காயங்களை விளைவித்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவனின் நண்பர்கள் உட்பட ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கட்டிடத்திலிருந்து விழுந்து பலத்த காயமடைந்த அம்மாணவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தற்பொழுது நினைவு திரும்பிய நிலையில் அவனது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அல்வி ஜைனல் தெரிவித்தார்.

Related News