கிள்ளானில் மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இருந்த ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் குடிபோதை ஓட்டுநர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமது ஃபைசல் வலியுறுத்தியுள்ளார்.
2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள் போதிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 'கொலை செய்யும் நோக்கம்' இருப்பதாகவே கருதப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், ஜெராண்டுட் நாடாளுமன்ற உறுப்பினர் கைரில் நிஜாம், இத்தகைய குற்றவாளிகளுக்கு ஆயுட்கால ஓட்டுநர் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதுள்ள சட்டத்தின்படி, இக்குற்றத்திற்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.








