மலாக்கா, அலோர் காஜா, கேலமாக் பகுதியில் வீட்டின் முன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களின் தடுப்புக் காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 19 வயதுடைய தாய், அவரது காதலன் மற்றும் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த தாய், அக்கா, தம்பி ஆகியோர் அடங்குவர்.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே இந்தக் குழந்தை புதைக்கப்பட்டிருக்கலாம் என போலீார் சந்தேகிக்கின்றனர். பிறப்பை மறைத்தல் எனும் பிரிவின் கீழ் அலோர் காஜா போலீசார் இந்தத் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.








