மாமன்னருக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில், அரசியல் விமர்சகர் பாப்பகோமோ என அழைக்கப்படும் வான் அஸ்ரி வான் டெரிஸ்க்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி நோர்மா இஸ்மாயில் உத்தரவிட்டார்.
கே.கே. மார்ட் உரிமையாளர், மாமன்னரை சந்தித்தது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொலி ஒன்றில், வான் அஸ்ரி கேள்வி எழுப்பியிருந்தார்.
இது 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்பட்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றஞ் சாட்டப்பட்டவர் முன்னாள் போலீஸ்காரர் என்பதால் சட்டத்தை நன்கு அறிந்தவர் என்றும், இவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.








