மலேசியக் கப்பல்கள் ஈரான் எல்லைக்குட்பட்ட ஹார்முஸ் நீரிணையை கடக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் தெரிவித்து இருந்தார். இருப்பினும், ஈரான் அங்கு டோல் கட்டணம் வசூல் மையத்தை' அமைத்து, ஒரு கப்பலுக்கு சுமார் 80 லட்சம் ரிங்கிட் வரை கட்டணம் வசூலிப்பதாகப் பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ள சுபாங் எம்பி வோங் சென், மலேசியக் கப்பல்களும் இத்தகைய கட்டணத்தைச் செலுத்துகின்றனவா என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மக்களின் வரிப்பணம் இதில் ஈடுபடுத்தப்படுவதால், இதில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








