Sep 30, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்

Share:

கனமழையைத் தொடர்ந்து ஜோகூர் பாருவில் இன்று பிற்பகல் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

ஜாலான் கோலாம் ஆயர், நோங் சிக், ஜாலான் ஆயர் மோலெக், ஜாலான் யாஹ்யா, ஜாலான் பந்தாய், ஜாலான் வோங் அஹ் ஃபூக் மற்றும் கம்போங் பாசீர், தம்போய் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளம் காரணமாகச் சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளிகள் மற்றும் படங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை பதிவாகியுள்ளது.

Related News