இரண்டு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமைத் தலைமை இயக்குநர் ஷுஹைலி ஸையின் மீது, புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறை உள்நாட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இணையாக இந்த விசாரணையும் நடைபெறுவதாக அத்துறையின் இயக்குநர் அய்டா அப்துல் ஹாமிட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் உடல் காயங்கள் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்காக ஷுஹைலி மீது சிவில் வழக்குத் தொடரத் தயாராகி வருகின்றனர்.








