சரவாக், கூச்சிங்கில் 16 வயது மாணவர் ஒருவர் கோடாரி போன்ற பொருளால் பெண் ஆசிரியரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து, ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூச்சிங் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கேல்வின் யீ வலியுறுத்தியுள்ளார்.
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய அவர், பள்ளிகள் மாணவர்கள் அச்சமின்றிக் கல்வி கற்கும் பாதுகாப்பான இடங்களாக இருக்க வேண்டும் என்றார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர், சரவாக் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவரிடமிருந்து கோடாரி எனச் சந்தேகிக்கப்படும் கூர்மையான பொருளும் பட்டாசுகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான மனநல ஆதரவை உறுதிப்படுத்துவதுடன், சமூக ஊடகங்கள் மற்றும் காணொளி விளையாட்டுகளின் தாக்கம் குறித்தும் ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








