Oct 21, 2026
Thisaigal NewsYouTube

70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

பினாங்கு, பிறை, கம்போங் மானிஸ் குடியிருப்புப் பகுதியின் 70 ஆண்டுகால மறுசீரமைப்புத் திட்டக் கனவு நனவாகியுள்ளதாக பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி பிறை, கம்போங் மானிஸ், வாழ் மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்ததாக டத்தோ ஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

ஏறக்குறைய 70 ஆண்டுகாலமாக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இப்பகுதியின் மறுசீரமைப்பு மற்றும் மறுமேம்பாட்டுத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான 'விருப்பக் கடிதம்' வழங்கும் விழா பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றதாக டத்தோ ஸ்ரீ சுந்தராஜு கூறினார்.

இந்த விழாவிற்கு முன்னதாக, அன்றைய தினம் காலை அமர்வில் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்களின் நிலத்தைக் காலி செய்தல் மற்றும் மறுகுடியமர்வுக்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் ஆர்ஏசி (RAC) எனப்படும் ரயில்வே அசெட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் முக்கிய மைல் கல்லாகும் என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →