Oct 21, 2026
Thisaigal NewsYouTube

கிள்ளான் மருத்துவமனையில் கூரை இடிந்து விழுந்தது; நோயாளிகள், ஊழியர்கள் பாதிக்கப்படவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிள்ளான்  மருத்துவமனையில் கூரை இடிந்து விழுந்தது; நோயாளிகள், ஊழியர்கள் பாதிக்கப்படவில்லை

கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்னால், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், இந்தச் சம்பவத்தில் நோயாளிகளுக்கோ மருத்துவமனை ஊழியர்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை.

இரவு 7.15 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், கூரைக்கு மேலிருந்த குழாயில் ஏற்பட்ட கசிவால் கட்டமைப்பு வலுவிழந்ததன் காரணமாக நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

தூய்மைப் பணிகள், பழுதுபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அந்தப் பாதை மீண்டும் திறக்கப்பட்டது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம்போல் தொடர்ந்து செயல்படுவதாகவும், நோயாளிகள், வருகையாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

கோலாலம்பூர் விமான நிலையத்தில் 26ஆம் தேதி முதல் மோப்ப நாய்கள் சோதனை

கோலாலம்பூர் விமான நிலையத்தில் 26ஆம் தேதி முதல் மோப்ப நாய்கள் சோதனை

புகைமூட்டம்: 7 மாநிலங்கள், கோலாலம்பூர், புத்ராஜெயா பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: 7 மாநிலங்கள், கோலாலம்பூர், புத்ராஜெயா பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

ஷுஹைலி மீதான புகார்: புக்கிட் அமானில் விசாரணை

ஷுஹைலி மீதான புகார்: புக்கிட் அமானில் விசாரணை

ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் மீது தாக்குதல் புகார்; இரண்டு போலீஸ் அதிகாரிகள் இழப்பீடு கோரி சிவில் வழக்கு

ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் மீது தாக்குதல் புகார்; இரண்டு போலீஸ் அதிகாரிகள் இழப்பீடு கோரி சிவில் வழக்கு