கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏவில் வரும் 26ஆம் தேதி முதல் பயணிகள் பகுதிகளிலும், பயணப் பைகள் கையாளப்படும் இடங்களிலும் மோப்ப நாய்கள் மூலம் சோதனைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
புறப்பாடு, வருகை மண்டபங்கள், சுங்கச் சோதனைப் பகுதிகள் மற்றும் பயணப் பைகள் பிரிக்கும் இடங்களில் மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ முஹமட் இஸானி கானி தெரிவித்தார்.
அண்மையில் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹெனேடா விமான நிலையத்தில், காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன், 19 முதல் 26 வயதுக்குட்பட்ட ஐந்து மலேசியர்கள் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.








