மூவார், ஜூலை.27-
“வெளிநாட்டினர் மலேசியாவுக்கு வரி கட்டுவதில்லை; உலகில் எந்த நாட்டிலும் குடிமக்களுக்கு இணையான உரிமை வெளிநாட்டினருக்கு இல்லை. பிரதமராக எனது முதல் கடமை மலேசிய மக்களைப் பாதுகாப்பதே!" என வெளிப்படையாகப் பேசினார் பிரதமர் அன்வார் இப்ராஹிம். மேலும், இலக்கிடப்பட்ட மானியச் சீர்திருத்தத்திற்குப் பிறகு, ரோன்95 பெட்ரோல் விலை 1 ரிங்கிட் 99 சென்னாகக் குறையும் என்றும், இதனால் 18 மில்லியன் வாகன ஓட்டிகள், குறிப்பாக இளைஞர்களும் கிக் தொழில்துறை ஊழியர்களும் பயனடைவார்கள் என்றும் அறிவித்தார்.
பெட்ரோல் விலைக் குறைப்பில் திருப்தி அடையாதவர்கள், நமது அண்டை நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதனை வாங்கிப் பார்த்தால் விலை நிலைமை புரியும் எனத் தமதுறையில் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த துணிச்சலான பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.








