Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவுக்கு முதல் வருகை புரியும் சீன பிரதமர்
தற்போதைய செய்திகள்

மலேசியாவுக்கு முதல் வருகை புரியும் சீன பிரதமர்

Share:

புத்ராஜெயா, ஜூன் 18-

மலேசியாவுக்கு இன்று அதிகாரப்பூர்வ முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ள சீனாவின் பிரதமர் லி க்சியாங்-ங்குடன் சந்திப்பை நடத்தவுள்ளார், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

மலேசியா - சீனா இடையிலான இருவழி உறவை வலுப்படுத்துவது தொடர்பில், அவ்விரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

இரு நாடுகளின் நலன் சார்ந்த அனைத்துலக மற்றும் வட்டார விவகாரங்கள் குறித்து, அவ்விருவரும் கருத்துகளை பறிமாறிக்கொள்ளவிருப்பதாக, விஸ்மா புத்ரா அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும்,இலக்கவியல் பொருளாதாரம், பசுமை மேம்பாடு, சுற்றுலா, வீடமைப்பு மற்றும் நகர்புற மேம்பாடு, உயர்க்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சீனாவுக்கு மலேசியாவின் வேளான் பொருள்களை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்வது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கையெழுத்துகள் இடப்படவுள்ளன.

மலேசியா - சீனா இடையிலான 50 ஆண்டு கால உறவைக் கொண்டாடும் வகையில் லி க்சியாங்-ங்கின் மலேசிய பயணம் அமைந்துள்ளதாக விஸ்மா புத்ரா கூறியது.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு