Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

Share:

ஜப்பானின் கியூஷு மாநிலத்தில் உள்ள குமாமோட்டோ ப்ரெபெக்சர் நகரில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருந்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு ஜப்பானிலுள்ள மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையமான ஜேஎம்ஏயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், அரியாக்கே கடல் மற்றும் யட்சுஷிரோ கடல் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

கட்டிடங்கள் இடிந்தது, தீ விபத்துகள், மின்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சேதத்தின் அளவை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

மேலும், அடுத்த சில நாட்களில் பிந்தைய நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜேஎம்ஏ அறிவுறுத்தியுள்ளது.

Related News