தேசியக் கூட்டணி ஆட்சியின்போது அப்போதைய தொடர்பு, பல்லூடக அமைச்சின் கீழ் செயல்பட்ட சமூகத் தொடர்புத் துறை அல்லது J-KOMஐ பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023. மே 19 ஆம் தேதி பிரதமர் டான் ஶ்ரீ முகிதீன் யாசின் பதவி ஏற்ற போது, J-KOMஐ பிரதமர் துறையின் கீழ் வைக்க அமைச்சரவை முடிவெடுத்ததாக தொடர்பு, பல்லூடக, இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
அக்காலக் கட்டத்தில் தொடர்பு, பல்லூடக அமைச்சராக டத்தோ ஶ்ரீ சைபுடின் அப்துல்லா இருந்தார். ஆகவே, அமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் விளக்கம் கேட்பது சிறப்பானது எனத் தாம் கருதுவதாக திரோ நீ சிங் குறிப்பிட்டார்.
முன்னதாக, பிரதமர் துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் J-KOMஐ தொடர்பு, பல்லூடக, இலக்கவியல் அமைச்சின் கீழ் வைக்குமாறு தாசேக் கெலுகோர் நாடளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் வலியுறுத்தினார்.








