Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அந்த கூற்றில் உண்மையில்லை, அமைச்சர் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த கூற்றில் உண்மையில்லை, அமைச்சர் விளக்கம்

Share:

மலேசியர்களுக்கு இஸ்ரேல், விசா விலக்களிப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுவதை மலேசிய அரசாங்கம் மறுத்துள்ளது. அந்த கூற்றில் உண்மையில்லை என்று உள்துறை அமைச்சசர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் விளக்கம் அளித்துள்ளார்.

மலேசியர்களுக்கு இஸ்ரேல், விசா விலக்களிப்பை வழங்கியிருப்பதாக கூறப்படுவது மலேசியாவின் தோற்றத்தை களங்கப்படுத்தும் செயலாகும் அமைச்சர் சைபுடின் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சர் என்ற முறையில் தம்மையும் மற்றும் ஒற்றுமை அரசாங்கதையும் களங்கப்படுத்தும் நோக்கில் தீய நோக்கத்துடன் இப்படியொரு கதை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது என்று சைபுடின் விளக்கினார்.

Related News