Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் ஜசெக, 5 நாடாளுமன்ற தொகுதிகளைத் தக்கவைக்க தீவிரம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் ஜசெக, 5 நாடாளுமன்ற தொகுதிகளைத் தக்கவைக்க தீவிரம்

Share:

அடுத்த 16ஆவது பொதுத் தேர்தலில், பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளிட்ட எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஜோகூர் ஜசெக தயாராக இருப்பதாக அதன் தலைவர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

15ஆவது பொதுத் தேர்தலில் ஜசெக வென்ற தொகுதிகளைத் தக்கவைக்க கட்சி முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

எனினும், கடந்த தேர்தல் முடிவுகளை மட்டும் நம்பியிருக்காமல், மக்களின் ஆதரவை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

15ஆவது பொதுத் தேர்தலில் ஜோகூர் ஜசெக லாபிஸ், குளுவாங், இஸ்கந்தர் புத்ரி, கூலாய் மற்றும் பக்ரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதனிடையே, ஜோகூரில் பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் இணைந்தால், பக்காத்தான் ஹராப்பானின் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் 13 தொகுதிகள் ஆபத்து நிறைந்த அல்லது எச்சரிக்கை நிலையில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்