Sep 7, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளையின்போது பெண்ணை காயப்படுத்தியதாக வேலையில்லாதவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கொள்ளையின்போது பெண்ணை காயப்படுத்தியதாக வேலையில்லாதவர் மீது குற்றச்சாட்டு

Share:

பெண்ணை மடக்கி கொள்ளையடித்ததுடன் அவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக, 49 வயது வேலையில்லாத ஆடவர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

லீ கூன் இயூ என்ற அந்த நபர், தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 11.40 மணியளவில், பேரா, பத்து காஜா, தாமான் பத்து காஜா பெர்டானாவில் உள்ள ஒரு வீட்டில், 26 வயது பெண்ணை கொள்ளையடித்ததுடன், அவருக்கு காயம் ஏற்படுத்தியதாக அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சம்பவத்தின்போது, அந்தப் பெண் தனது இரண்டு மாத கைக்குழந்தையைத் தூக்கி வைத்திருந்த வேளையில் கையில் குழந்தையை வைத்திருக்கிறார் என்று கூடபாராமல் அந்தப் பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட நபர் காயம் ஏற்படுத்தியதாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நபர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அடுத்த விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த நபரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 8 ஆயிரம் ரிங்கிட் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து