Sep 14, 2026
Thisaigal NewsYouTube
சக இந்திய பிரஜையை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த கே.அழகேசனின் தண்டனையை நீதிமன்றம் நிலைத்தியது
தற்போதைய செய்திகள்

சக இந்திய பிரஜையை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த கே.அழகேசனின் தண்டனையை நீதிமன்றம் நிலைத்தியது

Share:

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில், சக இந்தியப் பிரஜையை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த வழக்கில், கே. அழகேசன் என்பவருக்கு விதிக்கப்பட்ட 35 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 12 பிரம்படி தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி காலை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முதியோர் இல்லத்தின் வரவேற்பறைக்குள் சென்ற கே. அழகேசன், அங்கு தூங்கிக் கொண்டிருந்த சுகன் கணேசன் என்பவரை சுத்தியலால் தாக்கி கொலை செய்தாக அழகேசன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி கே. அழகேசன் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டை விசாரணை செய்த நீதிபதி ரோட்சாரியா புஜாங் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தண்டனையை குறைப்பதற்கான போதுமான காரணங்கள் இல்லை எனக் கூறி, கே. அழகேசன்-ன் மேல்முறையீட்டை ஒருமனதாக தள்ளுபடி செய்தனர்.

இதன் மூலம் அவருக்கு விதிக்கப்பட்ட 35 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 12 பிரம்படி தண்டனை நிலைநிறுத்தப்பட்டது.

Related News