Sep 7, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலம் ஸ்ரீமூடா அருகே கும்பல் மோதல்: 38 வயது ஆடவருக்கு பலத்த வெட்டுக் காயம்
தற்போதைய செய்திகள்

ஷா ஆலம் ஸ்ரீமூடா அருகே கும்பல் மோதல்: 38 வயது ஆடவருக்கு பலத்த வெட்டுக் காயம்

Share:

ஷா ஆலம், ஸ்ரீ மூடா பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நேற்று கும்பலிடையே ஏற்பட்ட மோதலில், பாராங் கத்தியால் வெட்டப்பட்ட 38 வயது ஆடவர் படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் நேற்று காலை சுமார் 11 மணியளவில் நடந்ததாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சமா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் கிள்ளான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கும்பல்களுக்கு இடையிலான இந்த மோதலில் பாராங் கத்தி மற்றும் துப்பாக்கி போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபட்டது, ஆயுதத்தைப் பயன்படுத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்தியது மற்றும் துப்பாக்கி போன்ற பொருளை வைத்திருந்தது ஆகிய குற்றங்களின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து