Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ஓய்வுபெற்றவரிடம் இல்லாத வரித் தொகையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி- இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஓய்வுபெற்றவரிடம் இல்லாத வரித் தொகையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி- இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போவில், இல்லாத வரிப் பாக்கியைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஓய்வுபெற்ற 60 வயது நபரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி செய்ததாக இரு பெண்கள் மீது இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

42 வயது நூர் ஃபாரா சுரினா அஹமட் மற்றும் 33 வயது நூர் ஃபலா நூர்டீன் ஆகிய இரு பெண்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த ஏப்ரல் 10 மற்றும் 14ஆம் தேதிகளிலும், ஜூன் 4ஆம் தேதியும், பேரா, கிந்தா மாவட்டம், தாமான் ஈப்போவில் உள்ள விஸ்மா ஹாசில் வருமான வரி கட்டட வளாகத்தில் அவர்கள் இந்த மோசடியை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு வருமான வாரியமான எல்.எச்.டி.என்- னுக்கு செலுத்த வேண்டிய இல்லாத வரிப் பாக்கியைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, இரு பெண்களும் கூட்டு சேர்ந்து, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து முறையே 23 ஆயிரம் ரிங்கிட் , 86 ஆயிரத்து 196 ரிங்கிட் மற்றும் 10 ஆயிரம் ரிங்கிட்டை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்