சிலாங்கூர், ஜெராம் பகுதியில் உள்ள பூலாவ் அங்சா கடலோரப் பாறைகளில், கேன்வாஸ் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஆடவரின் அழுகிய சடலம் ஒன்றை தூண்டில் மீன்பிடிப்பவர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை 4.50 மணியளவில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சித் தகவல் போலீஸ் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
புஞ்சாக் ஆலாம் UiTM மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அந்த நபர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் காணாமல் போயிருந்தால், 03-32891222 என்ற எண்ணில் புலனாய்வு அதிகாரி கைரோல் ஹிஷாம் ஷம்சுதீனைத் தொடர்பு கொள்ளுமாறு கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டெண்ட் அசாஹருடின் தாஜுடின் கேட்டுக் கொண்டுள்ளார்.








