Jul 1, 2026
Thisaigal NewsYouTube
SME நிறுவனங்களுக்கு 500 கோடி ரிங்கிட்  உதவி: பிரதமர் அன்வார்  அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

SME நிறுவனங்களுக்கு 500 கோடி ரிங்கிட் உதவி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

Share:

SME எனப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சலுகைகளையும் நிதியுதவிகளையும் அறிவித்துள்ளது தொழில் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'ஷாரிகாட் ஜாமினான் பெம்பியாயான் பெர்நியாகான்' என்ற திட்டத்தின் கீழ் 5 பில்லியன் ரிங்கிட் நிதி உத்தரவாதத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கட்டுமானம், விவசாயம், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 80 விழுக்காடு வரை நிதிப் பாதுகாப்புடன் கடன் வசதிகளைப் பெற முடியும்.

அத்துடன், மின்-இன்வாய்ஸ் முறைக்கு மாறுவதற்கான காலக்கெடு 2027 டிசம்பர் 31 வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மோதல்கள் மற்றும் எரிபொருள் நெருக்கடியால் அதிகரித்துள்ள செயல்பாட்டுச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இறக்குமதி வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைகளையும் பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை