Jul 18, 2026
Thisaigal NewsYouTube
மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

Share:

எம்ஆர்டி ரயில் நிலையத்தின் மின்படிக்கட்டுப் பகுதியில் வெளிநாட்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் இக்காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, எம்ஆர்டி ரயில் நிலையம் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளில் நடக்கும் இதுபோன்ற தவறான செயல்களை உடனுக்குடன் புகாரளிக்குமாறு ரேபிட் கேஎல் நிறுவனம் பொதுமக்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது.

ரயில் நிலையங்களில் சிறுநீர் கழிப்பது, ரயிலுக்குள் உண்பது அல்லது மதுபானங்களைக் குடிப்பது போன்ற ஒழுங்கீனமான செயல்களைக் கண்டால் உடனடியாக அதிகாரிகளிடம் புகாரளிக்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து இணையவாசிகள் தங்களின் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதைத் தவிர்த்து, நாட்டைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக போலீஸ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மற்றவர்களுக்குப் பயம் ஏற்படும் என்றும் அவர்கள் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

Related News