Sep 27, 2026
Thisaigal NewsYouTube
71 வயது முதியவருக்கு 7 நாள் போலீஸ் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

71 வயது முதியவருக்கு 7 நாள் போலீஸ் தடுப்புக்காவல்

Share:

கடன் தகராறு காரணமாக கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள உணவகத்திற்கு முன்பாக நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு பெண் உட்பட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 71 வயது முதியவர் ஒருவர் 7 நாட்களுக்கு தடுப்புக்காலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அந்த முதியவர், குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் தடுத்து வைக்க

மாஜிஸ்திரேட் நூர்காலிதா ஃபர்ஹானா அபு பாக்கர் உத்தரவிட்டுள்ளார்.

தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் 37 முதல் 63 வயதுக்குட்பட்ட மூன்று நபர்களை அந்த முதியவர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தனிப்பட்ட கடன் விவகாரமே இந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப் ரஹமான் அர்சாத் தெரிவித்துள்ளார்.

Related News