Sep 24, 2026
Thisaigal NewsYouTube
2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி
தற்போதைய செய்திகள்

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

Share:

ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், ஸ்கூடாய் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகக் களம் காண்கிறார் கார்த்தியாயினி ஜெயபாலன்.

ஸ்கூடாய் தொகுதியில் தமது தேர்தல் பிரச்சாரத்தை கார்த்தியாயினி கடந்த சனிக்கிழமை தொடங்கிய போதிலும் , பல ஆண்டுகளாகவே இத்தொகுதியில் தொடர்ந்து மக்கள் நல்வாழ்விற்காகக் களப்பணி ஆற்றி வருகிறார். அதேவேளையில் பெர்லிங் மற்றும் ஸ்டாய் தொகுதிகளிலும் திறம்படச் செயலாற்றிய மிகச்சிறந்த அரசியல் அனுபவமிக்கவராக கார்த்தியாயினி பார்க்கப்படுகிறார்.

மத்திய அரசாங்கமும் ஜோகூர் மாநில அரசாங்கமும் இணக்கமாகச் செயல்பட்டு, வலுவான பொருளாதார முதலீடுகளையும் தொகுதி மேம்பாட்டையும் கொண்டு வர வேண்டும் என்பதே ஸ்கூடாய் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. தொகுதி மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, மக்கள் மத்தியில் எதார்த்தமாக உலா வரும் மண்ணின் மகளான வேட்பாளர் கார்த்தியாயினி ஆதரித்து, ஸ்கூடாய் தொகுதியில் ஒரு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற பொதுவான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related News