Apr 20, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களின் படைப்பாற்றல் எல்லை மீறக்கூடாது - உயர் கல்வி அமைச்சு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மாணவர்களின் படைப்பாற்றல் எல்லை மீறக்கூடாது - உயர் கல்வி அமைச்சு எச்சரிக்கை

Share:

மலேசியப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் படைப்பாற்றல் செயல்பாடுகள், பொதுமக்களின் உணர்வுகளையும் உள்ளூர் கலாச்சார சிறப்புகளையும் மதிக்கத்தக்க வகையில் அமைவதை உறுதி செய்யுமாறு உயர் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தகவல் கல்வி வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய சர்ச்சைக்குரிய நாடகக் காட்சி ஒன்றைக் குறிப்பிட்ட உயர் கல்வி துறையின் தலைமை இயக்குநர் பேராசிரியர் Datuk Azlinda Azma, இது மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றார். கலைத் திறனை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் மாணவர்கள் சில எல்லைகளைக் கடந்துவிட்டதாகவும், இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதல்ல, ஒரு கவனக்குறைவே என்றும் அவர் விளக்கமளித்தார்.

கிழக்கித்திய பண்பாடு மற்றும் உள்ளூர் நெறிமுறைகளைச் சிதைக்காத வகையில் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது பல்கலைக்கழகங்களின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.

Related News