Apr 8, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் கும்பல் தாக்குதல்: பள்ளி மாணவர்கள் உட்பட 45 பேர் கைது
தற்போதைய செய்திகள்

செராஸ் கும்பல் தாக்குதல்: பள்ளி மாணவர்கள் உட்பட 45 பேர் கைது

Share:

கோலாலம்பூர், செராஸ், தமன் ஷாமெலின் உள்ள ஒரு காரோக்கி மையத்தின் மீது கும்பல் நடத்திய தாக்குதல் தொடர்பாக, இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட 45 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தத் தாக்குதலுக்கு தொழில் போட்டியே காரணம் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ ஃபடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 14 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் இரும்புத் துண்டுகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்று டத்தோ ஃபடில் மார்சுஸ் மேலும் விளக்கினார்.

Related News