ஶ்ரீ கெம்பாங்கான், அக்டோபர்.30-
ஶ்ரீ கெம்பாங்கானில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள ப்ளூ வாட்டர் எஸ்டேட் அருகே நேற்று பிற்பகலில் அச்சடலம் நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
அப்பெண் சுமார் 144 செ.மீ. உயரமுடையவராகவும், பழுப்பு நிற முடியுடன், நீண்ட நகங்களும், இரு காதுகளிலும் வெள்ளி காதணிகளும் அணிந்திருந்தார்.
அதே வேளையில், பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்கள் அணிந்திருந்ததுடன், வலது கையில் ஒரு டாட்டூவும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.








