Nov 2, 2026
Thisaigal NewsYouTube

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 மலேசியர்கள் – அந்நாட்டு அதிகாரிகளுடன் புக்கிட் அமான் பேச்சுவார்த்தை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 மலேசியர்கள் – அந்நாட்டு அதிகாரிகளுடன் புக்கிட் அமான் பேச்சுவார்த்தை

இணையக் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 மலேசியர்கள் விவகாரம் தொடர்பில், அந்நாட்டு அதிகாரிகளுடன் புக்கிட் அமான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.

இதற்காக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரைப் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சந்தித்துப் பேசுமாறு தாம் பணித்துள்ளதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின் முடிவில் கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பாகிஸ்தானின் ரவல்பிண்டியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட இணைய மோசடி மையச் சோதனையில் 130 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
காவலில் உயிரிழந்த நூரிஸ்வான் விவகாரம் – தடயவியல் மருத்துவர் வழக்கறிஞர்களுக்கு எதிராகப் புகார்

காவலில் உயிரிழந்த நூரிஸ்வான் விவகாரம் – தடயவியல் மருத்துவர் வழக்கறிஞர்களுக்கு எதிராகப் புகார்

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் கலப்புமுறை வகுப்புகள் – ஃபாட்லீனா அறிவிப்பு

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் கலப்புமுறை வகுப்புகள் – ஃபாட்லீனா அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு இடிஎஸ் ரயில் பயணச்சீட்டு விற்பனை 108 விழுக்காட்டை எட்டியது; கேடிஎம்பி தகவல்

தீபாவளியை முன்னிட்டு இடிஎஸ் ரயில் பயணச்சீட்டு விற்பனை 108 விழுக்காட்டை எட்டியது; கேடிஎம்பி தகவல்

குழந்தை பாலுக்காக மளிகைப் பொருட்களைத் திருடிய ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு 6 மாதச் சிறை

குழந்தை பாலுக்காக மளிகைப் பொருட்களைத் திருடிய ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு 6 மாதச் சிறை

திவேட் பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் ஊதியம்: நிறுவனங்கள் மீது ஜொஹாரி கானி குற்றச்சாட்டு

திவேட் பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் ஊதியம்: நிறுவனங்கள் மீது ஜொஹாரி கானி குற்றச்சாட்டு

டேசா துன் ரஸாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

டேசா துன் ரஸாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது